பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

ஆந்திராவில் சிகிச்சையா ?

" ஆந்திராவில் இருந்து சென்னை அப்போலோவுக்கும், ராமச்சந்திராவுக்கும் வருகிறார்கள், நீங்கள் ஆந்திராவிற்கு சிகிச்சைக்கு போயிருக்கிறீர்களே ",அப்பாவின் நலம் விசாரிக்க தொடர்புகொள்ளும் அனைவரும் கேட்கும் கேள்வி.

" மருத்துவத் தலைநகராய் விளங்கும் சென்னையை விடுத்து ஹைதராபாத்தில், அப்பாவுக்கு சிகிச்சை மேற்கொள்வது ஏன் ? " அண்ணன் ஆ.ராசா அவர்கள் வந்தவுடன் கேட்ட கேள்வி.

அண்ணன் ராசா அவர்களுக்கு பதிலளித்த Nizam's ...Institute of Medical Sciences-ன் இயக்குனர், " தென் இந்தியாவில் ஹைதராபாத்தில் மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சென்னை, பெங்களூரில் செய்யப்படுவதில்லை " என்று தெரிவித்தார்.

பார்கின்ஸன்ஸ் நோய்க்கு மேற்சிகிச்சை, அறுவை சிகிச்சை இருக்கிறது என்பதே, இன்னும் பரவலாக தெரியாமல் உள்ளது, குறிப்பாக மருத்துவர்களுக்கே தெரியாத நிலை.

பத்து வருடங்களாக பார்கின்ஸன்ஸ்-க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிற எங்களுக்கும் தற்போது தான் தெரிய வந்தது.

ஹைதராபாத்தில் இருக்கிற மத்திய அரசின் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த ஆராய்ச்சியாளர் ஒருவர், பத்து வருடங்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு, நேற்று தான் அறுவைசிகிச்சைக்கு வந்துள்ளார்.

பார்கின்ஸன்ஸ் நோய் தங்களுக்கு வந்திருப்பது தெரியாமலேயே, பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

வயதானவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் என்ற பொதுவான ஒரு எண்ணமும் இருக்கிறது. தற்போது இளம்வயதினரும் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே மாரடைப்பு, சர்க்கரை வியாதி போன்றவற்றிற்கு அளிக்கப்படுகிற விழிப்புணர்வு, பார்க்கின்ஸன்ஸ்-க்கும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

தற்போது ஆங்கிலப் பத்திரிக்கைகளில் இந்த நோய் குறித்து செய்தி கட்டுரைகள் வர ஆரம்பித்திருக்கின்றன. தமிழ் பத்திரிக்கைகளும் இது குறித்து செய்திகள் வெளியிட வேண்டும்.
 
 

4 கருத்துகள்:

  1. தந்தைக்கு விரைவில் உடல்நலம் சீராக வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் சார். அறுவை சிகிச்சை இருக்கிறதென்பது புதிய தகவல்

    பதிலளிநீக்கு
  3. பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் உபயோகமான தகவல். நன்றி...

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள ஐயா,

    தங்களால் இயன்றால், இந்த நோய்க்கு ஏதேனும் மாற்று சிகிச்சை இருக்கிறதா? என்று கேளுங்களேன்

    நோய் பற்றிய தகவலுக்கு

    http://manithaabimaani.blogspot.in/2012/10/blog-post.html

    இப்படிக்கு

    சங்கீதா

    பதிலளிநீக்கு