பிரபலமான இடுகைகள்

திங்கள், 4 பிப்ரவரி, 2013

பார்கின்ஸன்ஸ் நோய் - தெரிந்துக் கொள்ள வேண்டியவை....


பார்கின்ஸன்ஸ் நோய் - தெரிந்துக் கொள்ள வேண்டியவை....

எனது அப்பா இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதால், எனக்கு இது குறித்த தெரிந்த தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பொதுமக்களிடம் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு பெரிய அளவில் இல்லை. வயதானவர்களுக்கு மாத்திரம் வரும் என்ற ஒரு எண்ணம் நிலவுகிறது. அது தவறு என தற்போது தெரிய வருகிறது.

ஹைதராபாத்தில் உள்ள நிசாம்ஸ் இன்ஸ்டிடியூட்டில் உள்ள நரம்பியல் துறைக்கு வருகிறவர்களில் நாற்பது வயதுக்கு குறைந்தவர்கள் அதிகரித்து வருகின்றனர். இது மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம்.

முதலில் நோய்கான அறிகுறிகளை காண்போம்....

* கைகள் தானாக துடிப்பது ( Tremors )
* தலையில் நடுக்கம்
* நடை தடுமாறுதல், நடக்க இயலாமல் போதல்
* தசைகள் விறைப்பாதல் ( கை,கால்கள் மடக்க இயலாது )
* முதுகு வளையத் துவங்குவது
* கையெழுத்து சிறிதாகவும், ஒரே அளவில் இல்லாமல் மாற துவங்குதல்
* முகத்தில் எந்த உணர்வுகளையும் பிரதிபலிக்க இயலாமல் இறுகி போதல்
* கண்கள் தானாக துடித்தல்
* எச்சில் ஒழுகுதல்
* உணவை விழுங்க இயலாத நிலை
* தொடர் மலச்சிக்கல்
* தசைகளில் வலி
* நினைவுகளை இழத்தல்
* பதற்றம், மன அழுத்தம்
* சிறுநீரை கட்டுப்படுத்த இயலாமை

இத்தகைய அறிகுறிகளை வயதானவர்களிடத்தில் காணும்போது, மூப்பு காரணமாக ஏற்படுகிற பாதிப்புகள் என நினைத்து சிகிச்சை எடுக்காமல் விட்டுவிடுகின்றனர்.

இவை அத்தனையும் பார்கின்ஸன்ஸ் நோய்கான அறிகுறியாகவே இருக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை. ஆனால் இவை தொடர்ந்து இருந்தால் மருத்துவரிடம் பரிசோதனைக்கு செல்வது அவசியம்.

மூளையில் சுரக்கின்ற ஒரு ரசாயனத்தின் பெயர் டோபமைன் ( Dopamine ). தசைகளை கட்டுபடுத்துவதற்கு, நரம்பணுக்களுக்கு இந்த ரசாயனமே உதவுகிறது.

இந்த ரசாயனத்தை உற்பத்தி செய்கிற மூளை செல்கள், பார்கின்ஸன்ஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு மெல்ல சிதைய துவங்குகின்றன. இதனால் டோபமைன் உற்பத்தி தடைபடுகிறது.

இதனால் மூளையின் அந்த பகுதியில் உள்ள நரம்பணுக்கள், உடலின் சில பாகங்கள் செயல்படுவதற்கான உத்தரவுகளை அனுப்ப இயலாமல் போகிறது. இது தசைகளை செயலிழக்க செய்கிறது.

காலப்போக்கில் மூளை செல்களின் சிதைவு அதிகமாகும், அப்போது முழுவதுமாக இயக்கம் தடைபடும் சூழல் வரலாம். இன்னும் சிலருக்கு உடல் இயக்கத்தினை கட்டுபடுத்த இயலாமல் போகும். மலம், சிறுநீர் போன்றவை அவர்களை அறியாமல் பிரியும்.

துவக்கத்திலேயே இதற்கான சிகிச்சைகளை துவங்காவிட்டால், நோயின் கொடூரம் அதிகமாகும். முழுவதுமாக செயல்பட முடியாமல் போகும்.

சரி, பார்கின்ஸன்ஸ் நோயை எப்படி குணப்படுத்துவது...

* பார்கின்ஸன்ஸ் நோயை குணப்படுத்த முடியாது....

( தொடர்ந்து பார்ப்போம்... )

4 கருத்துகள்:

  1. மிக முக்கியமான தகவல்கள்.பணிகளுக்கிடையேவும் பகிர்வதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. பார்கின்ஸன்ஸ் நோய் - தெரியாது... பலரும் அறிய...

    பகிர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  3. என்னுடைய அப்பாவும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிரமபடுகிறார். முக்கியமான தகவல்கள் பகிர்வுக்கு நன்றி, இன்னுமும் விரிவாக எதிர்ப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. மிக முக்கியமான தகவல்கள். பகிர்வதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு