பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 28 மே, 2013

அது ஒரு கிரிக்கெட் காலம்....



"சண்முகா தியேட்டர் முனையிலிருந்து, ஆண்டிமடம் அணியை சேர்ந்த சந்திரமோகன் பந்து வீசுகிறார். பாளையங்கோட்டை அணியை சேர்ந்த மோசஸ் எதிர்கொள்கிறார். சற்றே மிதமான வேகத்தில் வந்த பந்தை அடித்தாட முயல்கிறார். ஏமாற்றிய பந்து கீப்பரின் கையில் தஞ்சமடைகிறது"

பள்ளி மைதானத்தின் இலையுதிர்ந்த மரத்தின் உச்சியில் கட்டிய புனல் ஒலிப்பெருக்கியிலிருந்து உள்ளூர் கமெண்டேடரின் வர்ணனை காதை பிளக்கும். 

கோடை வெயிலை வீணாக்காமல், மதிய உணவு குறித்த கவலை இல்லாமல், நண்பகல் இரண்டு மணிக்கு உச்சி வெயிலில் கிரிக்கெட் தவமிருந்த காலம்.

வரும் பந்தை தாண்டவிட்டு, மண்ணை தட்டுகிறாரா பந்தை தட்டுகிறாரா எனத் தெரியாமல் தட்டி நான்குக்கு விரட்டும் அசாருதீன்,

சீறி வரும் பந்தை பார்க்காமல் அலட்சியமாக நின்று கொண்டிருந்து எப்போது பாய்ந்தார், பிடித்தார் எனத் தெரியாமல் லாகவமாக கேட்ச் பிடித்து ஃபீல்டிங்கில் கலக்கிய அஜய் ஜடேஜா.

இருந்த சாதனைகளை எல்லாம் முறியடித்து, புதிய சாதனைகளை படைத்து, அதையும் தானே முறியடித்து கிரிக்கெட்டின் சிறுகடவுளாக அவதாரமெடுத்த சச்சின் டெண்டுல்கர்.

அலட்டிக் கொள்ளாமல் அமைதியாய் சாந்தசொரூபியாய் சாதித்த அணில் கும்ப்ளே, சிக்ஸ் சித்து... இப்படி கிரிக்கெட் ஒரு மதமாக இந்தியாவில் அவதாரமெடுத்த காலம்.

டெஸ்ட் கிரிக்கெட் என ரிலாக்ஸாக ஆடி பிறகு லிமிட்டெட் ஓவராக டிரிம் செய்யப்பட்டு, 5 நாள், 3நாள் போய் ஒரு நாள் கிரிக்கெட்டாகி அதுவும் 20-20 என அவசர உலகின் பாஸ்ட்ஃபுட் கலாச்சாரத்தில் சுருங்கி...
அதற்கேற்ப வீரர்களும் பிஃக்ஸிங்கில் இறங்கி மேட்ச் பிஃக்ஸிங், ஸ்பாட் பிஃக்சிங், பால் பிஃக்சிங் என கண்டுபிடித்து....

சோடா மூடியால் பந்தை சுரண்டியது போல், லலித் மோடியால் கிரிக்கெட் சுரண்டப்பட்டு ஐ.பி.எல்-லோடு கிரிக்கெட் மீதான நம்பிக்கை சுரண்டப்பட்டு...

# அது ஒரு கிரிக்கெட் காலம்....


               *****************************************************************   

26.05.2013 அன்று நடைபெற்ற IPL போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் நடைபெற்ற இறுதி போட்டியின் முடிவு பிக்ஸ்சிங்கின் அருமையை வெளிப்படுத்துகிறது...

இனி கமென்ட்ரி....

யோவ் சுத்தி சி.பி.ஐ நின்னு பாத்துகிட்டு இருக்கான்யா. 1 பால், 2 பால்ல அவுட் ஆகாதிங்கய்யா. 10 பால்க்காவது நில்லுங்கைய்யா...

# சி.பி.ஐ ஆபிச்சர்ஸ் கொஞ்சம் கண்ணயும் காதயும் மூடுங்க....
                         *************************

ஸ்ரீசாந்த் போட்ட பந்து இன்னும் ஸ்பின்னாயி சுத்துதோ

சி.எஸ்.கே 41/6 (7.5 ஓவர்ஸ்)

# ஓவர், ஓவர்ர்ர்ர்ர்ர்ர்ர்............
.......
                       ******************************

அண்ணே, சீக்கிரம் கைல துண்டு போடுங்க....
சி.எஸ்.கே 58/7 (11.2)

#
ரெடியா ???? 
                       ******************************

மும்பை இந்தியன்ஸ் : 148/8 (20 ஓவர்ஸ்)
சென்னை சூப்பர் கிங் : 125/9 (20 ஓவர்ஸ்)

                        *****************************

டோனி சார், டோனி சார்... இவனுங்க அப்பவே படம் போட்டு காட்டிக் கொடுத்துட்டானுங்க...
God of Big Deals.
( மும்பை இந்தியன்ஸ் வெற்றி)

# பெரும் பேரங்களின் கடவுள் ! 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக