பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

கருப்புத் துண்டு வாத்தியார்...

கருப்புத் துண்டு வாத்தியார்...

நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது அவர் தான் ஆசிரியர். பெயரே விளக்கியிருக்குமே. அஃதே, சமயத்தில சட்டை இல்லாம கூட இருப்பாரு, ஆனா கருப்பு துண்டு இல்லாம அவர பார்க்க முடியாது.

மிக ஒடிசலான தேகம். அந்த துண்டு தெம்புல தான் நடக்குறாரோன்னு தோணும். ஆனா கொள்கையில் வலுவானவர். வேட்டி, முழுக் கைசட்டையில் கம்பீரமாக வருவார்.

அந்த நேரத்தில் திராவிட சிந்தனை நிரம்பியவர்களாகத் தான்இருப்பார்கள் ஆசிரியர்கள் பெரும்பாலும். காங்கிரஸ் ஆதரவாளர்களும் உண்டு, குறைவு. அ.தி.மு.க பற்றாளர்களர்களும் உண்டு.

எந்தக் கொள்கை உடையவர்களாக இருந்தாலும் ஆசிரியர் பணியை ஆராதித்து செய்வார்கள் அப்போது. ஒரு சிலர் மாத்திரம் விவசாயிகளாகவும் இருப்பார்கள், குடும்ப பாரம்பரியத்தால்.

கருப்புத் துண்டு வாத்தியாரை போன்று ஒவ்வொருவரும் ஒரு அடையாளம் சொல்லத் தக்கவராக இருப்பார்கள். இப்போதும் அப்படி பலர் அடையாளத்தோடு தான் இருக்கிறார்கள்.

வித்தியாசம் இப்போ சொல்லும் போது, பைனான்ஸ் வாத்தியாரு, ஜவுளிக் கடை வாத்தியாரு, இப்படி இன்னும் பல. அப்போதும் இப்படி சிலர் இருந்திருக்கிறார்கள். ஆனால் விகிதாச்சாரம் மாறி விட்ட்து.

நான்காம் வகுப்பில் சூசைராஜ். குள்ள உருவம், செவத்த தேகம். எப்போதும் சாந்தம் தவழும் முகம். அவர் வகுப்பென்றால் எல்லோருக்குமே பிடிக்கும். வார்த்தைகளுக்கே வலிக்காமல் பேசுவார், அவ்வளவு மென்மை.

அய்ந்தாம் வகுப்பில் பாலகிருஷ்ணன் வாத்தியார். அப்போ பார்த்த மாதிரி தான் இன்றைக்கு வரைக்கும். குள்ள உருவம், முழுவதும் நரைத்த முடி, அழுத்தமான பார்வை. பார்க்கும் போதே நடுங்க வைக்கும் அளவுக்கு டெரர். ஆனால் எப்படி இருந்தாலும் அனைவரும் மாணவர்கள் நலன் நாடுபவர்கள்.

கருப்புத் துண்டு வாத்தியார் தான் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான உணர்வை மனதில் ஆழப் பதித்தவர். அதை ஒட்டி தான் பெரியாரை பின் தொடர்ந்தது.

ஒரு நாள், ஒரு நண்பன் இறுக்கமாக இருந்தவனை விசாரித்தார். பேயை பார்த்து பயந்தேன் என சொல்ல, அதெல்லாம் பொய் என்று சொல்லி தைரியம் சொன்னார். தெளிய வைத்தார். அவ்வளவு மாணவர்கள் மீதான அக்கறையும்.

# ஆசிரியர் தின வணக்கங்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக