பிரபலமான இடுகைகள்

திங்கள், 2 செப்டம்பர், 2013

Happy birthday Krishna !

I support கிருஷ்ணா....  (கிருஷ்ண ஜெயந்தி )

Photo: I support கிருஷ்ணா....

மற்ற வேத புருஷர்களை போல் இல்லாமல், ஒடுக்கப்பட்ட இனமான இடையர் குலத்தில் பிறந்ததாக சித்தரிக்கும் போதே கிருஷ்ணர் ok. அப்புறம் மன்னராக பிறந்து மனைவியை கூட காக்க முடியாத ராமனை ஒப்பிடும் போது கிருஷ்ணா above.

மற்ற அவதாரங்களை போல் அரண்மனையில் பிறந்தார், ஆகாசத்தில் பிறந்தார் என்றில்லாமல் ஜெயிலில் பிறந்தார் எனும் போதே, கஷ்டத்தோடு பிறந்து சாதாரண மக்களின்  மனசுக்கு பிடிச்ச ஹீரோ ராமராஜன் போல செட் ஆயிடறாரு.

நிறைய உட்டாலக்கடியா இருக்கே கதை, அப்படிங்கறத ஒத்துகிட்டு தான் ஆகணும். அப்ப தானே சுட்டி டிவி சீரியலுக்கு கிராபிக்ஸ்ல திரைகதை அமைக்க, குழந்தைகள் ரசனைக்கு ஏத்ததா இருக்கும்.

இவரே குளத்துல சேலைய திருடி கோபியர்களிடம் காதல் லீலையா கலாட்டா பண்றாரு, அப்புறம் அவரே திரவுபதிய துகில் உரியும் போது, சேல கொடுத்து மானம் காக்குறாரு காண்டிராடிக்‌ஷன் இல்லையான்னு கேப்பீங்க. கே.எஸ்.ரவிக்குமார் படத்து ஹீரோ செஞ்சா ஒத்துகிறோம்ல...

"ஹாரிபாட்டர்" கதையில வர்ற அத்தனை டுபாக்கூரையும் காசு கொடுத்து பாக்கும் போது, சிறை கதவு தானா திறக்கறது, யமுனை வழிவிடுறது, மழையிலிருந்து ஆதிகேசவன் படம் எடுத்து காப்பாத்தறதுன்னு கிருஷ்ணாவோட மேஜிக்ஸ்லாம் ஏத்துக்கறது தப்பே இல்ல.

ஃசாப்ட்டான இந்த கிருஷ்ணா பிறந்தநாள்ல, அவர மாதிரி ஃசாப்ட்டான ஸ்வீட்டா செய்யலாம். அவரே வெண்ணெய தானே விரும்பி சாப்ட்டாரு, அப்புறம் நீங்க ஏன் அத விட்டுட்டு கடக்,மொடக்னு சீடை செய்யறீங்க. அது புடிக்கல...

அப்புறம் கொண்டாடுறது அவரு பிறந்தநாளு, அதுல ஜாலியா இல்லாம பகல்ல விரதம் இருக்கனும், நைட் தூங்கக்கூடாதுன்னுலாம் பயமுறுத்துறீங்க. இது ஓவர். ஃப்ரியா விடு, ஃப்ரியா விடு.....

மனைவியை கற்பை நிருபிக்க சொன்ன ராமனை அவதாரப் புருஷனாக காட்டறத போல இல்லாம, வெண்ணெய் திருடுவது, குளிக்கறத பாக்குறது, சாகசம் பண்ணுவதுன்னு சகல வீக்னஸ்களுடன் சித்தரிச்சிருப்பது கிருஷ்ணாவின் கேரக்டர் சூப்பர். 

அரசாங்கம் லீவு உட்டுடுச்சி. பசங்க ஹேப்பி. அதனால நானும் ஹேப்பி. அவ்வளவே.

# Happy birthday Krishna !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக