பிரபலமான இடுகைகள்

சனி, 10 மே, 2014

இரு சக்கரப் பேரணி - புல்லட் பிரச்சாரம் ஆனது...

ஆண்டிமடத்தில் பெரிய பரிசு காத்திருந்தது...
ஆண்டிமடம் போன உடன் திறந்த வாகனத்தில் உரை நிகழ்த்தி, பேரணியை துவக்கி வைத்து விட்டு இறங்கினேன். பைக் அங்கே நிற்கிறது என்றார்கள், கூட்டத்தின் முன் பகுதியை காட்டி. முன்னே சென்றேன். அங்கே கம்பீரமாக நின்றது அந்த பரிசு.

Royal Enfield Bullet. பார்த்தவுடன் சற்று மிரட்சி தான். சின்ன பைக்குகளை ஓட்டிய பழக்கம் இருக்கிறது, புல்லட்? இந்த புல்லட் ஜெயங்கொண்டம் மகேஷுடையது. ஏற்கனவே மகேஷ் வாங்கிய போது, கொண்டு வந்து காட்டிய அன்று 50 மீட்டர் ஓட்டி பார்த்த அனுபவம் மட்டும் தான்.

பட்டன் ஸ்டார்ட், தட் தட் தட் என ரெடியானது. இன்று ஒருவரும் பின்னால் உட்காரவில்லை (துணியவில்லை). கிளம்பியது பேரணி. சின்ன பைக்குகளை விட இதுவே ஓட்டுவதற்கு இலகுவாகவும் லாகவாகமும் இருந்தது. எளிதாக சைக்கிளை கையாளுவது போல வளைவுகளில் ஒத்துழைத்தது.

நிறுத்தும் இடங்களில் மட்டும் சிரமப்பட்டேன். அதுவும் போக போக சரியானது. என் கல்லூரி நண்பர் ஹரிகிருஷ்ணா ஒரு குழுவோடு பைக்கிலேயே கொடைக்கானல், இமயமலை போய் வந்த போது கிண்டல் அடித்தது உண்டு. இப்போது தான் பைக்கின் அருமை புரிந்தது.

100 கி.மீ போனதே தெரியவில்லை. பேரணி சிறப்பாக நடந்தேரியது. 20-ந் தேதி திருமானுர் ஒன்றியம், 21-ந் தேதி வேப்பூர் ஒன்றியம் என புல்லட் பயணம் தொடர்ந்தது. அதில் நிறைய சுவாரஸ்ய சம்பவங்கள். திருமானூரில் வி.சி.கட்சி மா.செ அன்பானந்தம் பின் சீட்டில் அமர்ந்தார். ஒ.செ கென்னடி ஒரு பைக்கை ஓட்டி வழிகாட்டியானார்.


                        

வேப்பூரில் பத்து நிமிடம் பின்னால் உட்காருகிறேன் என்று உட்கார்ந்த ஒ.செ அண்ணன் குன்னம் ராசேந்திரன் மதியம் வரை இறங்கவில்லை, "புல்லட் கம்பர்ட்டா இருக்குங்க" என்று. பெரம்பலூர் மா.செ அண்ணன் துரைசாமி ஒரு பைக்கில். வெங்கடாசலம் ஒரு பைக்கில், வெற்றிசெல்வன் ஒரு பைக்கில், தங்கதுரை ஒரு பைக்கில் என உட்கார்ந்து கொண்டு கல்லூரி மாணவர்கள் போல் இனிமையான பைக் ரைட்                 


                        .

ஆங்காங்கு நிறுத்தி இளநீர், மோர், ஜூஸ் என வழங்கி பயணக் களைப்பு தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள் கழகத் தோழர்கள். சில இடங்களில் எம்.எல்.ஏ-வை பின்னால் காரில் எதிர்பார்த்து, எங்களை போக சொல்லி கையாட்டி விட்டு தடுமாறிய காட்சிகள் வெயிலின் சூட்டை மறந்து சிரிக்கச் செய்தன


                        .

மைக் வைத்து பேச சொல்லும் இடங்களில் பைக்கிலிருந்து இறங்கப் போனால், நீண்ட தூரம் பயணம் செய்வதால், வேண்டாம் உட்கார்ந்து கிட்டே பேசுங்க என சொல்ல, வேன் பிரச்சாரம் போல பைக் பிரச்சாரம் அமைந்தது.

முதல் நாள் வெயிலின் கொடுமையாலும், புழுதி பறந்து கண்களில் தூசி நிரம்பியதாலும் அண்ணன் ஞானமூர்த்தி தனது "ரேபான்" கிளாஸை இரவல் கொடுத்தார். அது தான் மீதி மூன்று நாளும் கைக்கொடுத்தது. நல்லாத் தான் இருக்கு.

   

                                 

எப்படியோ பிரச்சாரப் பயணம் புல்லட் மீது ஒரு காதலை ஏற்படுத்திவிட்டது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக