பிரபலமான இடுகைகள்

சனி, 4 அக்டோபர், 2014

கடவுச்சீட்டு ப்ராசசிங்....பாஸ்போர்ட் புராணம் (3)

“பாஸ்போர்ட அனுப்பினா விசா ரெடி பண்ணுவோம்” “வச்சிகிட்டா வஞ்சகம் பண்றோம். ரெடி பண்ணி அனுப்பிடறேன்” என்று சொல்லி களத்தில் குதித்தேன். வாழ்வின் வாசலை திறந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக நிகழ்ச்சி மூலமே உலகத்தின் கதவையும் திறப்போமே என்ற எண்ணம்.

           

தட்கல்லில் விண்ணப்பித்தால் பத்து நாளில் வாங்கலாம் என்ற அறிவுரை கிடைத்தது. நேரில் போகும் போது எடுத்துப் போக வேண்டிய ஆவணங்களை தயார் செய்தேன். தட்கல் என்பதால் போலீஸ் விசாரணை இல்லாமலே பாஸ்போர்ட் வந்துவிடும். பிறகு விசாரணை நடக்கும்.

அதற்கு ஒரு அபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும். அதில் வழக்கே இல்லை என்று ஒப்புதல் அளிக்க வேண்டும். என் மீதோ தேர்தல் காலங்களில், அம்மா அரசால் அன்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இது என்ன புதிய தலைவலி என்று யோசித்தேன். பல அரசியல்வாதிகள் வெளிநாடு சென்று வருகிறார்கள், யார் மீது தான் வழக்கு இல்லை. கடுமையான வழக்குகள் தான் இருக்கக் கூடாது என்றார் வழக்கறிஞர் நண்பர்.

சரி, நேரடி அட்டாக்கில் இறங்க வேண்டியது தான் என்று முடிவெடுத்தேன். மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பாலமுருகன், மக்களுக்கு எளிதாக பாஸ்போர்ட் எடுக்க முகாம்கள் நடத்தும் செய்திகளை அடிக்கடி பத்திரிக்கைகளில் பார்த்திருக்கிறேன்.

         

அவரையே சந்திப்போம் என நேராக திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்திற்கே சென்றேன். அபிடவிட் சந்தேகத்தை தெளிவுப்படுத்தினார். இளைஞர், மென்மையான அணுகுமுறை. தட்கல்லில் வேண்டாம், என என் விண்ணப்பத்தை சாதாரண முறைக்கு மாற்றினார்.

அலுவலகத்திற்கு அனுப்பினார். வழக்கமான மத்திய அரசு அலுவலகத்திற்குள் செல்லும் எண்ணமே இல்லை. வித்தியாசமான அனுபவம். விண்ணப்பங்களை பரிசீலித்து நடைமுறைப்படுத்தும் பணியை டாடா நிறுவனம் மேற்கொள்வதால் விரைவாக நடந்தது.

ஆனாலும் புகைப்படம் மட்டும், அரசாங்க அலுவலகம்னா வாக்காளர் அடையாள அட்டை போல தான் எடுப்பாங்க போல. கைரேகை எடுத்தார்கள். ஆவணங்களை சரிபார்த்தார்கள். பணம் கட்ட சொன்னார்கள். அட இவ்வளவு தானா? இந்தப் பணியையா இத்தனை காலம் தள்ளி வைத்தோம்.

Feedback form கொடுத்தார்கள். அனைத்தும் excellent போட்டேன். உண்மையில் பாராட்டத்தக்க அளவில் சேவைகள் இருந்தன. “ஊருக்கு போங்க, பாஸ்போர்ட் வரும்” என்றார்கள். இரவு வந்தவுடன், இணையத்தில் பாஸ்போர்ட் ஸ்டேடஸ் பார்த்தேன்.

“under process“ என்று காட்டியது. தினம் பார்த்தேன், பார்த்துக் கொண்டிருந்தேன். ஆகஸ்ட் 7-ம் தேதி வாக்கில் மண்டல பாஸ்போர்ட் அலுவலருக்கு ஒரு மெசெஜ் அனுப்பினேன், நினைவூட்டி. உடன் நடவடிக்கை எடுப்பதாக பதில் அனுப்பினார்.

ஆகஸ்ட் 10. நண்பர்கள் மீண்டும் நினைவூட்டினார்கள். 12-ஐ தாண்டினால் விசா பிராசசிங்க்கு நேரம் போதாது என்றார்கள். ஆனால் அதற்கு மேல் பிரஷர் கொடுக்க எனக்கு விருப்பம் இல்லை. காத்திருந்தேன்.

# பத்திரிக்கையில் தலைப்பு செய்தி “பாஸ்போர்ட் கையிருப்பு இல்லாததால், விநியோகம் தாமதம்”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக